Sanitation workers arrested for protesting in Madurai Photograph: (madurai)
மதுரையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை உள்ளடக்கியது. ஐந்து மண்டலங்கள் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலையிலிருந்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தோல்வியில் முடிந்ததால் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அங்கு வந்த போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை தூய்மைப் பணியாளர்களையும் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். மதுரை சித்திரை திருவிழாவின் பொழுதும் நாங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறோம். அதற்கும் எந்த ஒரு சலுகையும் எங்களுக்கு கிடையாது என தங்களுடைய ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.