தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்தது முதலே, சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக இயங்கி வருகிறது. விஜய்யின் வருகையும் அவரது பேச்சுகளும், அரசியலில் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 1998ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். விஜய் - சங்கீதா ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்துகொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமலே இருந்து வந்தார். திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலாவந்து கொண்டிருக்கும்.
இந்த நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகினர். ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. உச்ச நடிகராக இருந்து, முதலமைச்சர் கனவோடு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தனிமனித வாழ்வில் தனது மனைவி மீது குடும்ப வன்முறையை நிகழ்த்தியும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் சங்கீதா கொடுத்த விவகாரத்து வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தவறான செய்திகளும், கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சங்கீதா பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்த உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/02/sangeetha-tvk-vijay-2026-03-02-15-02-47.jpg)