சமந்தா பிரபு, தமன்னா ஆகியோர் ஒரே முகவரியில் வசிப்பது போன்ற போலி வாக்காளர் பட்டியல் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால், அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

பீகார் தேர்தலின் போது ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 11ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாக்கும் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், ஜூபிலி ஹில்ஸ் தொகுதியின் வாக்காளர்களாக பிரபல நடிகைகளான சமந்தா, தமன்னா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒரே முகவரியில் இருப்பது போன்ற வாக்காளர் பட்டியல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. ஒரெ முகவரியில் நடிகைகள் இருப்பது போன்ற வாக்காளர் பட்டியல் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, வைரலான புகைப்படங்கள் போலியானவை என்றும் வாக்காளர் அடையாள விவரங்களைப் பயன்படுத்தி ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இது குறித்து உதவி தேர்தல் பதிவு அதிகாரி சையத் யஹியா கமல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி நடிகைகள் ஒரே முகவரியில் உள்ள வாக்காளர்கள் என்று பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், அதிகாரப்பூர்வ தேர்தல் தகவல்களை தவறாகப் பயன்படுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இது நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் பதிவிட்டது? என்பதையும் அவற்றை பரப்புவதற்கு காரணமானவர்கள் யார்? என்பதையும் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில் போலீஸ் தரப்பில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு அதிகாரிகள் வாக்காளர்களை வலியுறுத்தப்பட்டது.