திமுக நிர்வாகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. .
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை கீழ்நாடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது மனைவி சரிதாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கரியக்கோவில் காவல் துறையினர் ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இது தொடர்பாக இரண்டு பேரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ராஜேந்திரனுக்கும், ராஜமாணிக்கம் என்ற அவரது உறவினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளதாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow Us