Maheswari And Kabeer
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஓ) உள்பட 11 சிஇஓ க்களை இடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் திருவளர்செல்வி செங்கல்பட்டு மாவட்ட சிஇஓ ஆகவும், அங்கு பணியாற்றி வந்த கற்பகம் திருவள்ளூர் மாவட்ட சிஇஓ ஆகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட சிஇஓ ரேணுகா தென்காசிக்கும், அங்கு பணியாற்றி வந்த ரெஜினி ராமநாதபுரத்திற்கும், விருதுநகர் சிஇஓ மதன்குமார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், கன்னியாகுமரி மாவட்ட சிஇஓ பாலதண்டாயுதபாணி சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்ட சிஇஓ மகேஸ்வரி சேலம் மாவட்டத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த கபீர் சென்னைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட சிஇஓ எல்லப்பன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
ஈரோடு மாவட்ட சிஇஓ சுப்பாராவ் சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராகவும் (நிர்வாகம்), திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ சுவாமிமுத்தழகன் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதற்கு இணையான நிலையில் பணியாற்றி வந்த 26 பேருக்கு சிஇஓ ஆக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி, சிஇஓ ஆக பதவி பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முனிராஜ் திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ ஆகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மற்றொரு தொடக்கக் கல்வி அலுவலரான மோகன் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us