Advertisment

'மது, லாட்டரி, குட்கா விற்பனை'- 8 பேர் கைது

a5794

'Sale of liquor, lottery, gutka' - 8 people arrested Photograph: (arrest)

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், எஸ்.பி சுஜாதா உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட, பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் பேரலியைச் சேர்ந்த ஆறுமுகத்தை (36) கைது செய்த ஈரோடு சூரம்பட்டி போலீசார், அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதேபோன்று, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ( 51), வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (24), கோபி அடுத்த சீதாலட்சுமி புரத்தைச் சேர்ந்த பாலன் (43), பச்சமலையை சேர்ந்த கணேசன் (61), மொடக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (32), கஸ்பாபேட்டையைச் சேர்ந்த அபிராமி (31) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.பவானியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்ற, அதேப்பகுதியைச் சேர்ந்த தனத்தை (55) போலீசார் கைது செய்தனர்.

Advertisment
arrest Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe