Advertisment

நெல் கொள்முதலுக்காகச் சாக்குகள் ரயிலில் வரவழைப்பு!

pdu-sacks

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விளைந்த நெல் மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் பருவ மழை தொடங்கியுள்ளதால் கொள்முதல் செய்த நெல் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளும் நனைந்து முளைத்து வருகிறது. 

Advertisment

பல இடங்களில் நெல் மணிகள் முளைத்தும் விட்டதாக போராட்டங்களும் நடந்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு  குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால் நெல் உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் கொள்முதல் செய்வதிலும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு போவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கு பற்றறாக்குறை உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சாக்கு பண்டல்கள் வந்துள்ளது. அதே போல புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (25.10.2025) அதிகாலை ரயில் மூலம் 13 லட்சத்து 65 ஆயிரம் சாக்குகள் 2730 பண்டல்களாக வந்துள்ளது. இந்த சாக்கு பண்டல்களை சுமார் 80 லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பும் பணியில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

delta districts paddy paddy stock pudukkottai Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe