Advertisment

சபரிமலை தங்கக் கவச வழக்கு; சென்னையில் போலீசார் விசாரணை!

ambattur-incs

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவால் கடந்த 1998 ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானம் போர்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் அந்த தங்கமானது தங்க கவசமாக மாற்றப்பட்டது.  இதனையடுத்து தங்க கவசத்தை செப்பன்னிட்டு கொடுப்பதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவஸ்தானம் சார்பில்  நகைகளை கொடுக்கப்பட்டது. 

Advertisment

அதன்படி தங்க கவசம் செப்பனிடப்பட்டு, அதனை தேவஸ்தானம் போர்டு திரும்ப பெற்றுக் கொண்டது. இத்தகைய சூழ்லில் தான் கடந்த மாதம் கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் உயர் நீதிமன்ற அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தால். அதில் என்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தங்கக் கவசம் செப்பணியிடும் பணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதில் சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

அதன் அடிப்படையில் கேரள கேரளா உயர்நீதிமன்றம் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி   வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் உன்னி போத்தி என்பவர் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திடம் தங்க கவசத்தை செப்பனிடும் பணிக்காக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கூடுதல் டிஜிபி வெங்கடேசன் தலைமையில் போலீசார் இன்று (13.10.2025) காலை  அம்பத்தூர் பகுதியில் உள்ள சம்பந்தப்பட நிறுவனத்தில் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் சுமார் 12 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

gold Chennai sabarimala sabarimalai Ambattur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe