Russian President vlamidir putin to visit India
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நிற்கவில்லை. அதே வேளையில், இந்தப் போரில் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தரவுள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா - ரஷ்யா மன்றக் கூட்டத்தில் விளாடிமிர் புதின் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வின் போது, வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனுடான போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முறைமுறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர இருப்பது, உலக அரங்கில் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
Follow Us