2 நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று (04-12-25) மாலை இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தந்த அவரை, பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்தியா சார்பில் ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

இந்தியாவுக்கு வருகை தந்த விளாடிமிர் புடினுக்கு, இன்று இரவு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். அதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை நாளை (05-12-25) விளாடிமிர் புடின் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து நாளை டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா - ரஷ்யா மன்றக் கூட்டத்தில் விளாடிமிர் புதின் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வின் போது, வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்று கூறப்படுகிறது.

Advertisment

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நடைபெற்று, 4 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முறைமுறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா நட்பு பாராட்டி வருவது உலக அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது.