Russian President Putin's speech on the Kudankulam nuclear power plant project
2 நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (04-12-25) மாலை இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தந்த அவரை, பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இந்தியா சார்பில் ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு வருகை தந்த விளாடிமிர் புதினுக்கு, நேற்று இரவு பிரதமர் மோடி விருந்தளித்தார். அதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை இன்று (05-12-25) விளாடிமிர் புடின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா மன்றக் கூட்டத்தில் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் விளாடிமிர் புதின் கூறியதாவது, “கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆறு அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. அணு உலையை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவையான பங்களிப்பை தரும்” என்று கூறினார்.
Follow Us