கடந்த ஆண்டு, இந்தியா மீதான வரியை 50% உயர்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது அமெரிக்கா. இதையடுத்து, இந்த சம்பவம் இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, அரசு பதிலளிக்க வேண்டும் எனவும், அரசு வரியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்தன. ஆனால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா கைவிட வேண்டும், இல்லையெனில், இந்தியா மீதான வரியை 500% உயர்த்திக்குவோம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அதில் வர்த்தகம் சம்பந்தமாக பல விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, அமெரிக்கா விதித்த சில வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா மீதான வரியை குறைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அமெரிக்க பொருட்களை $500 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக வாங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை 25% லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இந்த வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து பங்கு சந்தை உயர வாய்ப்பிருப்பதாக வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பின் காரணமாக ஜவுளித்துறை வர்த்தகம் உயர வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தோல் பொருட்கள் சார்ந்த வர்த்தகமும் கணிசமான அளவிலான உயர்வை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிகுறைப்பானது ஒட்டுமொத்தமாக நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எண்ணெய் கொள்முதல் செய்வதை ரத்து செய்வது குறித்து இந்தியா, இதுவரை எங்களுக்கு எந்த வித அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும், இந்தியாவுடனான உறவை மேலும் மேம்படுத்தவே ரஷ்ய விரும்புவதாக ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போருக்கு பின்னால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து எண்ணெயை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், தற்போது இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து ரஷ்யா இந்த கருத்தை தெரிவித்துள்ளது. அதாவது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை கைவிடக்கோரி, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களின் இருந்து எந்தத் தகவலும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என  ரஷ்ய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Advertisment