ரஷ்யாவில் மெட்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில், சுமார் 10 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்த செயலியைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் தடைசெய்யப்பட்டதால் அவர்கள் கடும் பாதிக்குள்ளாகியுள்ளனர். ரஷ்ய அரசு உருவாக்கியுள்ள மேக்ஸ்எனும் உள்நாட்டுச் செயலியைப் பயன்படுத்த மக்களை நிர்ப்பந்திக்கும் வகையில், இந்த நடைமுறை அமைந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அதே போல், அந்நாட்டுத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ரோஸ்கோம்நாட்சோர், டெலிகிராம் செயலிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2022ம் ஆண்டு உக்ரைனுடனான போருக்குப் பிறகு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நாட்டில், ஏற்கனவே மெட்டாவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மீது தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஷ்யா தனது சொந்த செயலியை ஊக்குவிக்க வாட்ஸ்அப் சேவையைத் தடைசெய்ய முயல்கிறது. இது 10 கோடிக்கும் அதிகமான பயனர்களைப் பெரிதும் பாதிக்கும். ரஷ்யப் பயனர்களுக்குத் தொடர்ந்து சேவையை அளிக்க, எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ரஷ்யா தனது சொந்த செயலியின் மூலமாக மக்களின் தகவல்களைக் கண்காணிக்கும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் முதல் நாட்டில் பயங்கரவாத செயல்களைச் செய்யவும், குற்றவாளிகளுடன் மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும்குற்றச்சாட்டி வாட்ஸ்அப் நிறுவனத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ரோஸ்கோம்நாட்சோர் நிறுவனம் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/whatsapp-2026-02-12-19-42-13.jpg)