Advertisment

தொடரும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் - எம்.எல்.ஏ மீது பரபர குற்றச்சாட்டு

639

Ruling party councilors' sit-in protest continues - multiple allegations against MLA Photograph: (thiruvannamalai)

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்டது புதுப்பாளையம் பேரூராட்சி. இந்த பேரூராட்சி தலைவராக இருப்பவர் செல்வபாரதி மனோஜ்குமார். இவர் பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகின்றது. இதுக்குறித்து சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மா.செவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவிடம் புகார் சென்றும் பிரச்சனை தீரவில்லை. பிரச்சனை தீராததற்கு காரணம் சேர்மனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ சரவணன் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தில் கவுன்சிலர்கள் எதைச் சொன்னாலும் அதில் எம்.எல்.ஏ தலையிட்டு தடுக்கிறார்கள், பேரூராட்சி நிர்வாகத்தை கையகப்படுத்துகிறார் என மீண்டும் புகார் எழுந்து கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காலை முதல் 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

பேரூராட்சியில் உள்ள 13 கவுன்சிலர்களில் ஆளும்கட்சியான திமுக கவுன்சிலர்கள் 5 பேர், ஒரு மதிமுக கவுன்சிலர், இரண்டு சுயேட்சை கவுன்சிலர்கள், சமீபத்தில் நியமிக்கப்பட்ட நியமன கவுன்சிலர் ஒருவர் என 9 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடரும் இந்த உள்ளிருப்பு போராட்டம் குறித்து கவுன்சிலர்களிடம் பேசியபோது, கடந்த நான்கு வருடங்களாக கொசு மருந்து வாங்கி அடிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது, தெருவிளக்கு பராமரித்தல் ஒப்பந்தங்களை எடுத்தது இந்த நிறுவனங்கள். என எந்தப் பணியும் செய்யாமல் மாதம் மாதம் பல லட்ச ரூபாய் செலவு செய்வதாக கணக்கு காட்டினார்கள். மக்கள் ஏன் லைட் எரியவில்லை என மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள், நாங்கள் இதுப்பற்றி சேர்மனிடம் முறையிட்டால் அவரும் கண்டுக்கொள்வதில்லை.

அதேபோல் பல ஆண்டுகளாக பேரூராட்சியில் ஒப்பந்த பணிகளை செய்து வந்த அனைத்து பழைய ஒப்பந்ததாரர்களையும் புதுப்பிக்க அனுமதிக்காமல் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை சேர்ந்த தன் உறவினர்கள் மூலம் தான் நடத்தி வரும் பினாமி நிறுவனங்களான கண்ணன் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், கஜேந்திரா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பேரூராட்சியில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.

இப்பேரூராட்சியில் இந்நிறுவனங்கள் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளை எடுத்து செய்கிறது. அந்த ஒப்பந்த பணிகள் நடக்கும் இடத்தில் பேரூராட்சியை சேர்ந்த பொறியாளர் பிரிவின் எந்த அதிகாரியும் இல்லாமலேயே இரவு நேரத்தில் முறையான அளவு இரும்பு கம்பிகள் போடாமல் தரமற்ற வகையில் கான்கிரீட் போடப்படுவதால் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, கட்டப்பட்டும் வருகின்றன. இதனால் நாளை ஏதாவது விபத்து நடந்தால் கவுன்சிலர்கள் நாங்கள் தான் இதற்கு காரணம் என்பது போல் எதிர்கட்சிகள் பேசும், இதனால் பாதிக்கப்படப்போவது நாங்களும், கட்சியும் தான். தவறு யாரோ செய்ய நாங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

இதையெல்லாம் பேரூராட்சி கூட்டத்தில் சொன்னால் அதை கண்டுகொள்வதில்லை. அந்த இரண்டு நிறுவனங்களும் எம்.எல்.ஏவின் பினாமி நிறுவனங்கள். அதனால் அவற்றுக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்து பேரூராட்சி நிர்வாகத்தை கையகப்படுத்துகிறார். கடந்த மாதம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பேரூராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரும், பேரூர் திமுக செயலாளருமான சீனிவாசன் அவர்களை கூலிப்படையை ஏவி தாக்கினார்கள். இதனால் அவர் இரண்டு நாள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அமைச்சரிடம் சென்று முறையிட்ட பின்பு, இவ்விவகாரத்தில் அவர் தலையிட்டபின்பே அடித்தவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்கள். அப்போதும் அடித்தவர்கள் கைது செய்யப்படவில்லை, கட்சியின் பேரூர் செயலாளரை அடித்தவர்களை கைது செய்யாமல் தடுத்ததும் எம்.எல்.ஏ தான்.

தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாதா? நாங்கள் ஏதாவது கேள்வி கேட்டால் நீ சுந்தரபாண்டியன் ஆள் என எங்கள் மீது வீணாக பழி சொல்கிறார்  எம்.எல்.ஏ. அதோடு எங்கள் பிரச்சனையை சொன்னால் மிரட்டுவது, அவர் ஆள் என முத்திரை குத்தி ஒதுக்குவது, ரவுடிகளை விட்டு தாக்குவது எப்படி சரியாகும்?

நாங்கள் ஒவ்வொருவரும் லட்சங்களில் செலவு செய்துவிட்டு கவுன்சிலராகியுள்ளோம். எங்களுக்கு ஒருவேளையும் ஒதுக்கி தருவதில்லை. எம்.எல்.ஏவே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார். எங்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்பதில்லை என்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அவர்களை கண்டித்து மெத்தமுள்ள 13 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்கிறார்கள். பொங்கல் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக உள்ள நிலையில் ஆளும்கட்சி கவுன்சிலர்களின் இந்த போராட்டம் புதுப்பாளையம் ஒன்றியம், கலசபாக்கம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தை கைவிடச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன.

dmk admk counsilor thiruvannaamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe