ஆர்.டி.இ. எனப்படும் 2009 ஆம் ஆண்டின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை என்பது வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வந்தது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, “நிதி ஒதுக்காததால் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. எனவே இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதற்கான நிதியை மத்திய அரசு விடுவித்திருப்பதாகத் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

எனவே இந்த கல்வி ஆண்டிற்கான ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையானது இந்த நிதியிலிருந்து நடைபெறும். அதற்கான நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி 06.10.2025 அன்று மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.