Advertisment

“85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்” - அதிர்ச்சி தகவலைச் சொன்ன ஆர்.எஸ்.பாரதி

rsbharathiori

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

Advertisment

அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

எஸ்.ஐ.ஆர் படிவத்தை இறுதி நாளான நாளைக்குள் (14-12-25) சமர்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அரசியல் கட்சிகளுடன் ஆலோசிகாமல் வாக்குச்சாவடி மையங்கள் எப்படி அதிகரித்தது?. திமுக சார்பில், மோடி அரசால் தேர்தல் கமிஷனர் அறிவித்த இந்த எஸ்.ஐ.ஆர் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறோம். நீதிமன்ற வழக்கை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஏமாந்துவிடுவோம் என்ற அடிப்படையில் அனைவரும் களத்தில் இறங்கியதன் விளைவு ஏறத்தாழ 80இல் இருந்து 85% வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு முழு காரணமாக இருந்தது திமுக தான். திமுக தொண்டர்களும் திமுக வழக்கறிஞர்களும் இதில் ஈடுபட்டு முழுமையாக செய்ததால் தான் 85% வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு வாக்காளர் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வரைவு வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஏறத்தாழ 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது புள்ளிவிவரத்தோடு கணக்கு வந்தால் தான் தெரியும். யார் யார் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது 19ஆம் தேதிக்கு பிறகு தான் கவனமாக செயல்பட வேண்டிய ஒரு பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது” என்று கூறினார். 

R.S. Bharathi special intensive revision SIR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe