Rs. 7.11 crore stolen by hijacking an ATM vehicle in bangalore
பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் சித்தாபுரா பகுதி அருகே உள்ள சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் கிளை ஒன்று உள்ளது. அந்த ஏடிஎம்மில் பணம் வைப்பதற்காக ஏடிஎம் வாகனம் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் ஏடிஎம் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, வாகனத்தில் இருந்த பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களை மிரட்டி அதில் இருந்த 7 கோடியே 11 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த காரிலேயே துரிதமுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். ஏடிஎம் வாகனத்தின் பாதுகாவலர்களிடம் துப்பாக்கி இருந்த போது கொள்ளைக்காரர்களை தடுக்காமல் நின்றுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், கொள்ளையடுத்த நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், ஏடிஎம் வாகனத்தின் பாதுகாவலர்களுக்கும், பணம் கையாளுபவருக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us