மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாஸ்டின் என்ற நிறுவனமானது கமிஷன் அடிப்படையில் பணப் பரிவர்த்தனை (Money transfer) மற்றும் கொரியர் பணியைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த 20ஆம் தேதி ரூ. 4.5 கோடி மதிப்பிலான பணத்தைப் பெங்களூரில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்து கொண்டிருந்தனர். அதன்படி இந்த பணமானது காஞ்சிபுரத்தில் உள்ள ஆட்டுபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள சென்னை - பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்தது. 

Advertisment

அப்போது மாலை 4:00 மணி அளவில் ஆட்டுப்புத்தூர் என்ற பகுதியில் வாகனத்தை பின் தொடர்ந்து 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் அவர்களிடம் இருந்த ரூ. 4.5  பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து பொன்னேரிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் கண்டறியப்படாத காரணத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

Advertisment

அந்த வகையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதிலும், கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் செல்போன் சிக்னல் அடிப்படையில் தேடிப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாகத் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் 5  தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள பகுதியில் தொடர்ந்து தீவிர விசாரணையும், சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் சுஜிதால் ஆகியோர் பணத்தைத் திருடியது தெரிய வந்தது.  

அதன் அடிப்படையில் இவர்கள் நண்பருடன் சேர்ந்து 5 பேர் கடந்த சனிக்கிழமை (25.10.2025) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் 5 பேரும் காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு கொள்ளையடிக்கப்பட்ட பாதி பணம் மீட்கப்பட்டதாகக் காஞ்சிபுரம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் 10 பேருக்குத் தொடர்பு இருப்பதால் அவர்களைப் பிடிக்க 3 தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

Advertisment