Advertisment

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும்” - இ.பி.எஸ். தேர்தல் வாக்குறுதி!

eps-hq-pm

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினம் இன்று (24.022026) தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அதிமுகவின் 3ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும். மீன் பிடித் தடைக்காலங்களில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விசைத் தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாக உயர்த்தப்படும். 

Advertisment

பொங்கல் தொகுப்புடன் ஆண்டு தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்குப் பதிவு செய்து வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பட்டதாரிகள் வேலைக்குப் பதிவு செய்து வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகர்ப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Assembly Election 2026 edappadi k palaniswami admk manifesto Election manifesto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe