திருந்தி வாழ்ந்த ரவுடி கொலை-பட்டப்பகலில் அதிர்ச்சி

a4688

Rowdy who lived in Trinhdi was incident - Shocking in broad daylight Photograph: (police)

சென்னை டிபி சத்திரம் பகுதியில் திருந்தி வாழ்ந்த ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் புல்கான் எனும் ராஜேஷ். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் கடந்த 5 வருடமாகவே திருந்தி பந்தல் அமைக்கும் பணிகளைச் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜேஷை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்தனர். பெற்றோர்கள், முதிவர்கள் கையெடுத்து கும்பிட்டும் விடாத அந்த கும்பல் ராஜேஷை படுகொலை செய்துள்ளது.

விசாரணைக்காக அங்கு வந்து துணை ஆணையர் காலில் விழுந்த ராஜேஷின் பெற்றோர்கள் 'திருந்தி வாழ்வதாக பலமுறை மனுகொடுத்த நிலையில் மர்ம ரவுடி கும்பல் என் மகனை கொலை செய்துள்ளது' என முறையிட்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி  கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

என்ன காரணத்திற்காக ராஜேஷ் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருந்தி வாழ்ந்த ரவுடி பட்டப்பகலில் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe