chennai Photograph: (police)
டிஜிபி அலுவலகத்திற்கு கத்தியுடன் ஓடி வந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹதீஸ்உல்லா என்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சத்தியமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். ரவுடிகள் பட்டியலில் இருந்த சத்தியமூர்த்தி அந்த கொலை வழக்கில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய நண்பருடன் மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சத்தியமூர்த்தி சென்று கொண்டிருந்த பொழுது ஒரு கும்பல் அவரை துரத்தியுள்ளது.
ஹதீஸ்உல்லா தரப்பினர் தான் தன்னை கொலை செய்யத் துரத்துகிறார்கள் என யூகித்துக் கொண்ட சத்தியமூர்த்தி, அவர்களிடமிருந்து தப்பி மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குள் ஓடி தஞ்சம் அடைந்தார். சத்தியமூர்த்தி கையில் கத்தி வைத்திருந்ததால் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் அவரை கொலை செய்யும் நோக்கில் துரத்தி வந்த கும்பலில் ரபிக் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடி ஒருவர் பட்டப்பகலில் கத்தியுடன் டிஜிபி அலுவலகத்திற்கு புகுந்ததும், அவரை கொலை செய்யத் திட்டமிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow Us