Advertisment

'ரவுடி நாகேந்திரன் சாகவில்லை...'-பரபரப்பை ஏற்படுத்திய வாதம்

060

'Rowdy Nagendran is ALIVE...' - The argument that caused a stir Photograph: (NAGENDRAN)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி (05.07.2024) தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்போ செந்தில் என்பவர் மட்டும் இதுவரை தலைமறைவாக உள்ளார். அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதோடு கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Advertisment
இந்த வழக்கில்  A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டிருந்தார். ஏற்கனவே சிறையில் இருந்த நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்திருந்தார். நாகேந்திரனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றதோடு, நாகேந்திரனின் மகன் அவரது உடலுக்கு முன்னே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
Advertisment
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட வழக்கின் கோப்புகள் மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐக்கு ஒப்படைக்கப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வேண்டும். நீதிமன்றம் எந்த நிபந்தனைகள் கொடுத்தாலும் அதனை ஏற்க தயார்' என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பு இடையிட்டு மனுதாரராக இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதத்தை வைத்தார். ''இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் நாகேந்திரன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துவிட்டது'' என்ற பரபரப்பு குற்றச்சாட்டை கீனோஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்துள்ளர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஹரிஹரன், அஸ்வத்தாமன், அஞ்சலை ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் பத்தாம் தேதிக்கும், மீதமுள்ள 9 பேர்களின் ஜாமீன் மீதான தீர்ப்பை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
ரவுடி நாகேந்திரன் சாகவில்லை என்ற வாதத்தை கீனோஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதத்தை வைத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
 
 
Bahujan Samaj Party CBI highcourt amstrong rowdy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe