சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் ரவுடி ஒருவரை காலில் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

புதுச்சேரியைச் சேர்ந்த விக்கி என்கின்ற ரவுடி மீது பல்வேறு குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரவுடி விக்கியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விக்கியை காவல்துறையினர் பிடிக்க முயன்ற பொழுது காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி ரவுடி விக்கி தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு காரணமாக போலீசார் ரவுடியை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment