கர்நாடகாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் எட்டு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் சச்சான என்ற பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (16/09/2025) மாலை ஐந்து மணியளவில் பணியை முடித்துவிட்டு வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வங்கியை மூடுவதற்கான பணிகளுக்கு ஆயத்தமாகி இருந்தனர். அப்போது திடீரென முகமூடி அணிந்தபடி உள்ளே புகுந்த பத்து நபர்கள் உள்ளே இருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி மேலாளரை கத்திமுனையில் மிரட்டிக் கட்டிப்போட்டு வங்கியில் இருந்து 8 கோடி ரூபாய் பணம் மற்றும் 50 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையாக வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரம் கட்டி வருகின்றனர். வங்கியில் கத்திமுனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.