தமிழ்நாடு சட்ட பேரவை துணைத் தலைவராக இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, இவருக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி கல்லூரி, பள்ளி போன்றவை நாச்சிப்பட்டு என்ற இடத்தில் உள்ளன.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு இக்கல்லூரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 லட்சம் பணம் கொள்ளை போயிருந்ததை பார்த்து நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமரா பதிவு, கைரேகை பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர் யார் என தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த தேடுதல் வேட்டையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர் உள்ளே நுழைந்து பணம் கொள்ளையடித்துச் சென்று இருப்பதாக காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.

விரைவில் அந்த கும்பலை பிடித்து விடுவோம் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தை கமுக்கமாகவே போலீசார் கையாண்டு வருகின்றனர்.

Advertisment

ஒருவாரத்துக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கான டெல்லி பிரதிநிதி எம்பி விஜயன் வீட்டில் கொள்ளை போயிருந்தது,  அந்த கும்பலை போலீஸார் வளைத்து பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.