சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

தனியாரிடம் சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தால் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை இழக்க நேரிடும் என கூறி சாலைப் பணியாளர்கள் சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதனையொட்டி சென்னைக்குப் போராட வந்த சாலைப் பணியாளர்கள் 150 பேர் சென்னை வரும் வழியில் 350 பேர் என மொத்தம் 500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர், “சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம்” என முழக்கமிட்டனர். 

மற்றொருபுறம் பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.