கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அண்ணா நகர் வடக்கு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலன் நகர் அருகே உள்ள தெருவில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் நடுவே மின்சாரக் கம்பம் உள்ளது.இதனை அகற்றாமல் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாதி வருகின்றனர்.
சின்ன சேலம் மின்சார அலுவலகத்தில் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மின்சார கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு சாலை அமைக்கும் பணி தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மின்வாரியத்தை பொருத்தவரை பழுதடையாத மின்கம்பங்களை மாற்றவேண்டும் என்றால் தனியார் இடத்தில் இருந்தால் அந்த இடத்தின் உரிமையாளரும், பொது இடத்தில் இருந்தால் ஊராட்சி - நகராட்சி - மாநகராட்சி - அரசுத்துறை அலுவலகமாக இருந்தால் அந்த துறை சார்பில் மின்வாரியத்துக்கு பணம் செலுத்தவேண்டும் அதன்பின்பே மாற்ற முடியும். ஊராட்சி சார்பில் பணம் செலுத்தி மின்கம்பத்தை மாற்றச் சொன்னால்தான் மாற்றமுடியும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒப்பந்தம் எடுத்தவர் சாலை பணியை அமைத்துவிட்டார் என்கிறார்கள். மின்வாரியத்தினர் பணம் செலுத்தினாலும் கம்பத்தை மாற்றாமல் லஞ்சம் எதிர்பார்த்தும் வேலை செய்யாமல் இருக்கிறார்கள். 500 ரூபாய் அரசுக்கு கட்டினால் 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார்கள் என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/pole-2026-02-19-17-18-31.jpg)