Advertisment

முத்தமிட்டதால் கண்ணை இழக்கும் அபாயம்; குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

eng-eye-chid

இங்கிலாந்தைச் சேர்ந்த மிச்சல் சாய்ம் (36) என்பவருக்கு இரண்டு வயதில் ஜீவா என்று குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு சில மதங்களுக்குமுன்பு கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த குழந்தைக்கு ஆண்டி பயாடிக் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று சரியாகாததால், அந்த குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு எச்.எஸ்.வி. எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

Advertisment

இதையடுத்து, குழந்தையின் கண்ணில் பீவர் பிலிஸ்டர் எனப்படும் வாய்ப்புண் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் இதனை நம்ப மறுத்தார். அது எப்படி வாய்ப்புண் கண்ணில் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இருப்பினும், இந்த தொற்று இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். மிகவும் தாமதமாக இந்த தொற்றைக் கண்டறிந்ததால், கண் முழுவதும் பரவியுள்ளதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாகக் கண்ணில் இருந்து மூளைக்கு சிக்னல் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்ணில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த கண்ணில் 4 மில்லி மீட்டர் அளவிற்கு துளை ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இதனால் அந்த கண்ணில் அடிக்கடி தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் முழு கண்ணையும் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாய்ப்புண் தொற்று எப்படி குழந்தையின் கண்களுக்குப் பரவியது என்பதைக் கேட்ட போது, ஹெர்பஸ் வாய்ப்புண் தொற்று இருக்கும் யாரோ ஒருவர் குழந்தைக்கு முத்தமிட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி அக்குழந்தையின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது போன்று தொற்று உள்ளவர்கள் குழந்தைகளுக்கு முத்தமிட வேண்டாம் எனவும், பெற்றோர்கள் குழந்தையின் பாதுகாப்பில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

child Doctor England Eye kiss parents
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe