Advertisment

“டெல்லியில் உள்ள இந்த பிரச்சனை ஏஐயால் கூட தீர்க்க முடியாது” - மாநாட்டில் ரிஷி சுனக் பேச்சு!

rishisunak

தலைநகர் டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சி மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இதில், 45 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், 30 சர்வதேச அமைப்புகள், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய விம்சாவளியுமான, பிரிட்டன் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Advertisment

அவர் பேசுகையில், “மன்னிக்கவும், என்னால் இந்த விழாவில் உரிய நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் டெல்லியில் உள்ள போக்குவரத்து நெரிசல் தான். இந்த போக்குவரத்து நெரிசலால் நான் விழாவில் கலந்துகொள்ளத் தாமதம் ஆகிவிட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை ஏஐயால் கூட கட்டுப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை. இந்தியா பலவகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. குறிப்பாக, ஆதார், யுபிஐ மற்றும் ஆயுஷ்மான் போன்ற திட்டங்களை அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளன.

Advertisment

இந்தியா அமைத்துள்ள இந்த அடித்தளமே பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. ஏஐ பொறுத்தவரையில் இந்தியா சூப்பர் பவராக மாறி வருகிறது. இந்திய ஏஐ துறையில்  விரைவில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும்” என்று கூறினார்.

ரிஷி சுனக், இந்தியாவின் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது நமக்குப் பெருமை தான். இருந்த போதிலும் தலைநகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து அவர் பேசியிருந்தது வருந்தத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அவர், இது குறித்து நகைச்சுவையாகப் பேசியிருந்தாலும் கூட, இது பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

AI Rishi Sunak summit
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe