குடும்ப பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி ஹோட்டலில் வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரை மக்கள் விரட்டி விரட்டி வெளுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள சங்கீத ஹோட்டலில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து கணவர் தொல்லை கொடுத்து வருவதாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உங்கள் கணவர் தரப்பு வழக்கறிஞர் என்று கூறி ஞானப்பிரகாசம் என்பவர் கடந்த 10ஆம் தேதி மாலை இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி முடித்துக் கொள்ளலாம் என பெரம்பூரில் உள்ள சங்கீதா ஹோட்டலுக்கு வர சொல்லியுள்ளார்.
அப்போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போதே அந்த நபர் அப்பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி தவறாக நடக்க முயன்றுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து ஆத்திரமடைந்து அவரை அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஞானப்பிரகாசம் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. செம்பியம் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/334-2026-02-12-20-02-40.jpg)