Advertisment

பட்ஜெட் மீதான பதிலுரை : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!

admk-mlas-with-eps-assembly-outside-our-img

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அவரது தலைமையில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “18 மற்றும் 19ஆம் தேதி என இரு நாட்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவதாம் நடைபெறும். இந்த இரு நாட்களும் காலை கேள்வி பதிலுக்கான வினா விடைகள் நேரம் நடைபெறும். இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். வரும் 20ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம்  சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (18.02.2026) தொடங்குகிறது. அந்த வகையில் நேற்றும், நேற்று முன்தினமும் என இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) பதிலளித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர். அதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அவையை புறக்கணித்துள்ளனர். 

ops-pm
கோப்புப்படம்

மற்றொருபுறம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் அவைக்கு வருகை தந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் 16வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் முதலமைச்சரின் பதிலுரையையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தது கவனிக்கத்தக்கது. 

ADMK MLAs budget session O Panneerselvam pmk Thangam Thennarasu tn assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe