Advertisment

'காந்தியை மீட்பதை விட நிதியை மீட்பது முக்கியம்'-கமல்ஹாசன் கருத்து

a5866

'Rescuing the funds is more important than rescuing Gandhi's name' - Kamal Haasan Photograph: (kamal)

பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதத்தில் கடந்த 1 ம் தேதி தொடங்கி ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளிடையே காரசார விவாதங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களயும் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து நிறைவேற்றி  வருகிறது. அந்த வகையில் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசால் 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், நாட்டு மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திட்டம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழித்து மக்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையவும் அப்போதைய காங்கிரஸ் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டு, அதற்கு " மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்" எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த திட்டத்திற்கு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என  பெயர் மாற்றும்  மசோதாவை தற்போதைய ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மநீம எம்பி கமல்ஹாசன் செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''காந்தியாரின் பெயரை காக்கவும் மீட்கவும் தேவையில்லை. அது இப்போது முக்கியமில்லை. தமிழக அரசின் மீது  சுமை கூடுக்கிறது. அந்த நிதியை மீட்கவும் காக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். மக்களுக்கு சேர வேண்டிய பணம், உதவி நலத்திட்டங்கள் இவை எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும் காக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். காந்தியாரின் பெயரை மீட்க வேண்டியது இப்போது முக்கியமில்லை'' என்றார்.

Advertisment

'திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வீர்களா?' என்ற கேள்விக்கு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார்.

dmk 100 days workers b.j.p kamalhaasan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe