Advertisment

“ஆஜராக வேண்டும்” - அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ani-ambani-ed

அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Advertisment

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் அணில் அம்பானி.  இவரது நிறுவனங்கள் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அதோடு இவரை ‘மோசடி நபர்’ எனப் பாரத ஸ்டேட் வங்கி (SBI) அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மும்பை மற்றும் டெல்லியில் இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி  (24.07.2025) சோதனை நடத்தியிருந்தனர்.

Advertisment

அதாவது ராகா நிறுவனங்களில் (RAAGA companies - Reliance Anil Ambani Group Companies) எழுந்த சட்டவிரோத பண மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 5ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

anil ambani Delhi Enforcement Department Notice sbi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe