விசைத்தறிகளை மேம்படுத்த கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு...

Advertisment

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். 
 
தமிழகத்தில் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சாதா விசைதறிகளை நாடாயில்லா விசைத்தறிகளாக மாற்றம் செய்ய முதற்கட்டமாக இந்த வருடம் 3000 விசைத்தறிகளை மேம்படுத்த 30 கோடி மானிய தொகை ஒதுக்கி கொடுத்தும், நெசவாளர்கள் புதிய ரேப்பியர் தறிகளை 7.5 லட்சத்திற்கு கொள்முதல் செய்யும் பொழுது அவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு முதற்கட்டமாக இந்த வருடம் 1000 ரேப்பியர் தறிகளுக்கு 15 கோடி மானியத்தொகை ஒதுக்கி கொடுத்து நெசவாளர் வாழ்வில் விடியலை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மகிழ்வுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

Advertisment

தற்போது விசைத்தறிகளை Tuck in சாதனத்துடன் மேம்படுத்த 2.55 லட்ச ரூபாய் அதற்கு 18%GST (45900) இணைந்து 300900 ரூபாய் மதிப்பில் மேம்படுத்தினால் அரசு ஒரு விசைத்தறிக்கு ஒரு லட்ச ரூபாய் மானியம் கொடுக்கப்படும், TUCK IN சாதனம் இல்லாமல் விசைத்தறிகளை மேம்படுத்தும் பட்சத்தில் 170000+18%(30600)=200600 தொகைக்கு அரசு சார்பில் 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 1300க்கும் மேற்பட்ட விசைத்தறிகளை மேம்படுத்த ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்கள் இத்திட்டத்தில் பங்கு கொள்ள தங்களிடம் முதலீடு இல்லாத காரணத்தால் பெரும்பாலும் தயக்கம் கொண்டு வந்துள்ளார்கள். 

மேற்கொண்டு இத்திட்டத்தை முழுமையாக அனைத்து நெசவாளர்களும் பயன்படுத்த தமிழக அரசு இத்திட்டத்தை பயன்படுத்த பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் திட்டம் மற்றும் முத்ரா கடன் திட்டம் மூலம் சிறப்பாக செயல்படுத்தும் பட்சத்தில் பத்து தறி TUCK IN சாதனம் உடன் அவர்களுக்கு முதலீடு செய்ய 30 லட்ச ரூபாய் மற்றும் TUCK IN சாதனம் இல்லாமல் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது, ஆனால் தற்போதைய விசைத்தறி நெசவாளர்களின் பொருளாதார சூழல் காரணத்தால் முதலீடு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்கள். 

Advertisment

3 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு நெசவாளர்களின் பங்காகஒரு விசைத்தறிக்கு 60 ஆயிரம் ரூபாய், வங்கிகள் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனில்,ஒரு லட்ச ரூபாய் மானியம் போக மீதி  1.40 லட்சம் ரூபாய்க்கும்மற்றும் Tuck in சாதனம் இல்லாமல் விசைத்தறிகளை மேம்படுத்த 2 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு, ஒரு விசைத்தறிக்கு நெசவாளர்களின் பங்காக 50 ஆயிரம் ரூபாயும், முதலில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடனில் மானியம் 75 ஆயிரம் ரூபாய் போக மீதி ரூபாய் 75ஆயிரம் தேவையாக உள்ளது.

எனவே வங்கிகள் கடனாக தரும் தொகைக்கு மேற்கண்ட கிட்ட திட்டத்திற்கு நெசவாளரின் பங்களிப்பாக அளிக்க வேண்டிய தொகைக்கு வங்கிகள் கடன் கொடுப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும். 60 மாத காலக்கெடுவிற்கு திருப்பி செலுத்தும் வகையில், இந்த திட்டத்தில் பயன்படுத்துவோர் வங்கியில் கடன் பெறவும் அல்லது முத்ரா திட்டத்தில் கடன் பெற மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆவணம் செய்யுமாறு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்... என்ற கடிதத்தை தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர்,  TSA. சுப்பிரமணியம், அனுப்பியுள்ளார்.