விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜைப் பொருட்கள் மற்றும் பூக்கள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பிள்ளையார்பட்டியில் தேரோட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்று வருகிறது.
சிறிய களிமண் சிலைகள் முதல் 10 அடி முதல் பல்வேறு உயரங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகிறது. கொழுக்கட்டை பிள்ளையார், தேங்காய் பிள்ளையார் என பல்வேறு வகைகளில் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இஸ்லாமியர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை இந்துக்கள் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கி தங்களது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.