கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் வனதாஸ்மேரி ( 70), மரியசூசை(65), பிலோன்மேரி(60) ஆகிய மூன்று பேர், வீட்டின் உள்ளே இருந்த போது கனமழையால் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிர் இழந்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திந்கு தலா ரூ 10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

அதனை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் என ரூ 30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யாசெந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், வட்டாட்சியர் கீதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் செல்லையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

Advertisment