புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கண்காணிப்பு அலுவலராக உள்ள பொன்னையன் (இணை இயக்குநர் உதவிபெறும் பள்ளிகள்) கடந்த நவம்பர் மாதம் 22 ந் தேதி கானொளிக்காட்சி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களையும் சேர்ந்த 29 வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்களை ஒருமையிலும், மாவட்டமே பிராடு, என்பன போன்ற தகாத வார்த்தைகளில் பேசியது தங்களுக்கு மனஉளைச்சளை ஏற்படுத்தி உள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரிடம் புகார்மனு கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று 18 ந் தேதி வழக்கமான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொன்னையன் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்றும் அவர்கள் ஆய்வுக்கு பயன்படுத்தும் செயலிகள் தவறானது என்று கூறி ஜெ.டி பொன்னையன் வசைபாட தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரை செவிடன் போல இருக்கிறாய் என்று பேசியதும் இதனை ஏற்க முடியாத வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறி கூட்ட அரங்க வாயிலில் கூடியுள்ளனர்.
தொடர்ந்து மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதமாஔவும், வட்டாரக்கல்வி அலுவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடும் இணை இயக்நர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து புறக்கணிப்போம் என்கின்றனர் வட்டார கல்வி அலுவலர்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/ba-2025-12-18-12-58-45.jpg)