'தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடங்கும் எனவும் இரண்டாம் பகுதியில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பொழிய வாய்ப்பு இருக்கும்' எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிவிப்பின்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருவாரூர், நாகை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரிக்கு நாளைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (05/08/2025) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களையும் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.