சென்னை கிரிக்கெட் கிளப்பில் உடும்பு ஒன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இறைச்சிக்காக உடும்பு அடித்துக் கொல்லப்பட்டதா என்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கிரிக்கெட் கிளப்பில் மூன்று கிலோ எடை மற்றும் 3 அடி நீளம் கொண்ட உடும்பு ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அதை கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த யாரோ தற்காப்பிற்காக அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த கிண்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட அந்த உடம்பு அரியவகை பாதுகாப்பு பட்டியலில் உள்ள உடம்பு என்பது தெரியவந்துள்ளது. நகரப் பகுதிகளில் அந்த வகை உடும்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், எனவே இந்த உடும்பு வெளியில் இருந்து இறைச்சிக்காக கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இது குறித்து மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் இரவு நேரத்தில் பாதுகாவலர்களை தாக்க முயன்றதால் உடும்பை தாக்கியதாகக் கூறப்படுகிறது.