இன்று இரவு இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 வரை நிகழ இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:33 வரை முழுமையாக நிலவு மறையும் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இஸ்தான்புல், லண்டன், பீஜிங், பாங்காக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சந்திர கிரகணத்தை காணலாம். இந்தியாவிலும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.

Advertisment

மொத்தமாக 85 நிமிடங்கள் சந்திர கிரகணமானது நீடிக்க இருக்கிறது. முழு சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறமாக தோன்றும் என்பதால் இந்த நிகழ்வு 'பிளட் மூன்' அல்லது 'ரெட் மூன்' என்று அழைக்கப்படுகிறது. இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ஆம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும் என்பதால் இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிப்பதற்கு பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேக மூட்டங்கள் இல்லாத பட்சத்தில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.