நெல்லையில் ரம்புட்டான் பழத்தை சாப்பிட்ட ஐந்து வயது சிறுவனின் தொண்டையில் பழத்தின் விதை சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சீசனில் விளையக் கூடிய பழமான ரம்புட்டான் பழம் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு குற்றாலம் பகுதிகளில் விற்கப்பட்டு வருகிறது. இந்த பழமானது நெல்லை மாநகரப் பகுதிகளிலும் பல இடங்களில் விற்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் வசித்து வந்து நிஜாம் என்பவருக்கு ரியாஸ் என்ற ஐந்து வயது மகன் இருந்துள்ளார். ரியாஸுக்கு தாத்தா பாட்டி ஆசையுடன் ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக வாங்கி கொடுத்துள்ளனர். அப்பொழுது சிறுவன் பழத்தை சாப்பிட்ட பொழுது விதை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மேலப்பாளையம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.