கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மத பிரச்சாரத்திற்கு வந்தவர்களின் குல்லாவைப் பறித்து கேள்வி எழுப்பியதால் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினராக இருந்த ஒருவர் மூளையாக செயல்பட்டு இந்த கொலையை நிகழ்த்தியதாக சந்தேகம் எழுந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனும் என்ஐஏ விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் 6 பேர் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர்களை பற்றிய துப்பு கொடுத்தால் தலா 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலையில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்தார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று நபர்கள் என மொத்தம் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அலி ஜின்னாவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/16/a5841-2025-12-16-17-28-01.jpg)
சென்னையில் பதுங்கியிருந்த அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஓசூர் என்பவரையும் கைது செய்திருக்கிறார்கள். இதனால் இந்த கொலைக்கு காரணமாக இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அனைவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/a5842-2025-12-16-17-27-39.jpg)