Advertisment

ராமஜெயம் வழக்கு; திருச்சி காவேரி திரையங்கில் தீவிர விசாரணை!

Varun

அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகடிஐஜி வருண்குமார் திருச்சியில் விசாரணை நடத்தினார்.

Advertisment

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேருவின் சகோதரர்  கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

Advertisment

கொலையாளிகள் யார்? எதற்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் ? என்ற விவரங்கள் இன்றளவும் துப்பு துலங்காமல் உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை சிபிஐ, சிபிசிஐடி என மாறி மாறி நடந்து வருகிறது. இதுவரை துப்பு துலக்கப்படாத நிலையில் இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிசிஐடி டிஐஜி வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். டிஐஜி வருண் குமார் திருச்சி ,நெல்லை உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பல வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக பல இடங்களில் விசாரணை நடத்தி வரும் டி ஐ ஜி வருண் குமார் நேற்று இரவு திருச்சி பாலக்கரை அருகே செயல்படும் காவேரி திரையரங்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக திரையரங்க உரிமையாளர் மோகன் மற்றும் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திரையரங்கம் கடந்த 2012 ஆம் ஆண்டில் சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்தது. அதன் பின் சில ஆண்டுகளில் இது குத்தகைக்கு விடப்பட்டது. கொலை தொடர்பாக சதித்திட்டம் ஏதும் இந்த திரையரங்கில் தீட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ramajayam trichy Varun Kumar IPS
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe