அமைச்சர்கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்திகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகள் யார்? எதற்காகராமஜெயம் கொலை செய்யப்பட்டார் ? என்ற விவரங்கள் இன்றளவும் துப்பு துலங்காமல் உள்ளது.கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை சிபிஐ, சிபிசிஐடி என மாறி மாறி நடந்து வருகிறது.இதுவரை துப்பு துலக்கப்படாத நிலையில்இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐடி டிஐஜி வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். டிஐஜி வருண் குமார் திருச்சி ,
குறிப்பாக திரையரங்க உரிமையாளர் மோகன் மற்றும் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த திரையரங்கம் கடந்த 2012 ஆம் ஆண்டில் சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்தது.அதன் பின் சில ஆண்டுகளில் இது குத்தகைக்கு விடப்பட்டது. கொலை தொடர்பாக சதித்திட்டம் ஏதும் இந்த திரையரங்கில் தீட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/varun-2025-12-05-11-22-23.jpg)