Advertisment

ராமஜெயம் வழக்கு; உண்மைத் தன்மை அறியும் சோதனை!

Varun

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்ந்து பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவும் தங்களுடைய விசாரணை வட்டத்தில் 13 ரவுடிகளை சந்தேகத்தின் அடிப்படையில் உண்மைதன்மை கண்டறியும் சோதனையை நடத்தினார்கள்.

Advertisment

அதில் 5 ரவுடிகள் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட முதல் நாள் இரவில் தில்லை நகர் பகுதியில் அவர்களின் செல்போன் எண்கள் அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்து உள்ளது . அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய் குழு  விசாரணையில் காரைக்கால் பகுதியில் கூடி கொலை நடந்த 29ஆம் தேதிக்கு முன்னதாக மூன்று நாட்கள் முன்பு சந்தித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். இப்படி பல ஆதாரங்களை திரட்டி உள்ள சிறப்பு புலனாய்வு 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு எடுத்து நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை விரைவில் பெற உள்ளது.

இந்த கொலையானது தொழில் போட்டியில் ஏற்பட்ட கொலையா? அரசியல் கொலையா என்பது விரைவில் தெரியவரும். முக்கியமாக இந்த ரவுடிகள் யாரோ ஒருவர் சொல்லி இந்த கொலையை செய்துள்ளதாகவே தற்போது வரை தெரிகிறது. இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிறப்பு குழுவினார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் திருச்சி டிஐஜி வருண்குமார் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தலைமை ஏற்று ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பாளையங்கோட்டையில் டிஐஜி நேரடியாக களத்தில் இறங்கி மத்திய சிறைக்கு சென்று சுடலைமுத்து என்ற  கைதியிடம் 3 மணி நேரம் விசாரணை செய்துள்ளார்.

Advertisment

ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கண்டுபிடித்து தீர வேண்டும் என்ற நிலையில் அசைன்மென்டை முடிக்க திட்டமிட்டுள்ளார்.பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள சுடலைமுத்து மூன்று கொலை வழக்குகளில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலையில் இருந்ததாகவும் அப்போது ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கைபேசியில் ஏதோ பேசியதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருந்த செந்தாமரைக்கண்ணன் பறிமுதல் செய்து உடைத்தார் என தெரிகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில் தற்போது கொலை கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக உள்ள சுடலைமுத்துவுக்கு இந்தக் கொலையை பற்றிய தகவல் தெரியும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தாலும் எந்த வழக்கு எந்த சட்ட நடவடிக்கையாக இருந்தாலும் அதிரடி காட்டும் டிஐஜி வருண் குமார் களத்தில் இறங்கி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டதால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

trichy ramajayam ips varunkumaar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe