Ramadoss writes to Election Commission seeking allocation of mango symbol
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதனிடையே, அன்புமணியை பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.
அதனை தொடர்ந்து, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான தரப்பு என அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு சில மாதங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம், அன்புமணியின் சென்னை தி-நகரில் உள்ள அலுவலகத்திற்கு பதில் கடிதம் எழுதியது. இதன் மூலம், பா.ம.கவும், பா.ம.கவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு தான் என அன்புமணி தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் தலைவராக உள்ள பா.ம.வுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘1989இல் தொடங்கி தற்போது வரை நான் தான் கட்சியை நடத்தி வருகிறேன். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கிட்டதட்ட ஒரு கோடிக்கும் அதிகமான கட்சி நிர்வாகிகள் தற்போது உள்ளனர். பல்வேறு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டுள்ளோம்.
எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி பாஃர்மில் நானே கையெழுத்திட்டிருக்கிறேன். எனவே தொடர்ந்து எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மாம்பழம் சின்னம் தற்போது எங்களுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நான் தலைவராக உள்ள பா.ம.கவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us