Advertisment

“கூட்டணி குறித்து எப்போது முடிவெடுக்கப்படும்?” - ராமதாஸ் தகவல்!

ramadoss-pm-3

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 

Advertisment

அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. அதோடு அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

pmk-meet-our
கோப்புப்படம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (25.11.2025) ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “டிசம்பர் 30ஆம் தேதி பாமக சார்பில் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். இந்த பொதுக்குழுவில் உறுப்பினர்களின் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Alliance anbumani ramadoss Assembly Election 2026 general body meeting pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe