Advertisment

“இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும்” - ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

ramad

Ramadoss said Tamil Nadu politics will be exciting in 3 days

பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிர்திசையில் இருக்கும் கூட்டணியில் இணைய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

Advertisment

ஆனால், எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்பது ராமதாஸ் இதுவரை உறுதி செய்யாமலே உள்ளார். இதனிடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை அந்த முடிவை எடுக்காமலேயே உள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “கூட்டணியைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, விரைவில் முடிவு செய்வோம். மாற்றங்கள் வருவது இயற்கை தான். ஆனால் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருப்போம். இன்னும் மூன்று நாட்களில் தமிழக அரசியலில் ரொம்ப பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை நீங்கள் பறைசாற்றுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe