Advertisment

“முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி நல்லாதான் இருக்கு” - ராமதாஸ்

ramad

Ramadoss said CM Stalin's rule is good

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அண்மையில் பா.ம.க தலைவர் அன்புமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தான் அமைக்கும் கூட்டணி தான் செல்லுபடியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்ப மனு வழங்கும் பணி இன்று (09-01-25) விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்றது. இந்த பணி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கூட்டணி அமைந்தது என்றால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் இங்கு பங்கு கேட்க மாட்டோம். அமெரிக்காவில் தான் கேட்போம். இந்தியா எங்களுக்கு பிடிக்க மாட்டிக்கிறது, அதனால் அமெரிக்க அதிபரிடம் போய் கேட்கலாம் என்று நினைக்கிறேன்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து பேசிய அவர் , “கலைஞர் இருக்கும் போது ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று சொன்னோம். அது ஒரு காலம். ஐந்து வருடம் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை கலைஞருக்கு கொடுத்தோம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து. காங்கிரஸுக்கு பங்கு கேட்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் ஐந்து வருடம் கலைஞர் ஆட்சியை ஆதரித்தேன்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அவர், “கூட்டணி தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும். நேரம் வரும், காலம் வரும் அப்போது உங்களுக்கு பதில் தானாகவே கிடைக்கும்” என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டுடைய கூட்டணி கணக்குகளை டெல்லிக்கு சென்று தீர்மானிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எதுவும் நடக்கலாம். இது அரசியலில் சகஜமாக போய்விட்டது” என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி நல்லாதான் இருக்கிறது” என்று பதிலளித்தார். இதையடுத்து திருமாவளவன் இருக்கிற கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அரசியலில் எதுவும் நடக்கும், என்ன வேண்டுமானாலும் நடக்கும். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது” என்று கூறினார். இதையடுத்து தவெகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நீங்கள் ஊகிக்கிற அளவுக்கு உங்கள் கற்பனைக்கு எல்லாம் நான் தீனி போட முடியாது. அந்த தகவல் கற்பனையான தகவல் தான். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. செயல் தலைவர் ஸ்ரீகாந்த் தேர்தலில் போட்டியிடுவார். 

mk stalin Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe