மாநிலங்களவை உறுப்பினர்களான என். ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன.
அதன்படி, இந்த தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தேமுதிக மற்றும் காங்கிரஸுக்கு தலா 1 மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு இடங்களுக்கு திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிட்டுள்ளனர். மறுபுறம், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.கவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்துக்கு அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (05.03.2026) கடைசி நாள் என்பதால் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதே போல், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதே போல் அதிமுக வேட்பாளரான தம்பிதுரை இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். மறுபுறம் அதிமுக கூட்டணியில் பா.ம.கவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் அன்புமணி போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், அன்புமணிக்கு போட்டியாக அவரது தந்தையும் பா.ம.க நிறுவனருமான ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளர் சாமிநாதன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை முன்மொழிய 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அதன்படி திமுக, அதிமுக தரப்பில் தாக்கப்பட்டுள்ள வேட்புமனுவை முன்மொழிய போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அந்த கட்சிகளினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ம.கவுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அன்புமணி - ராமதாஸ் ஆகியோரின் மோதல் போக்கால் சட்டமன்ற உறுப்பினர்கள் இருதுருவமாக இருக்கின்றனர். அந்த வகையில் ராமதாஸுக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு நிலையில் இருப்பதால் அவரது தரப்பு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/anbumaram-2026-03-05-17-34-13.jpg)